தர்ம இயக்கம் சார்பில் தண்ணிறைவுத் தமிழகம் என்ற தலைப்பில் திருச்சி தமிழ்நாடு ஹோட்டலில் மாநில அளவிலான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் பொன்னார் அமைப்பு சங்கத்தின் நிர்வாகி யோகநாதன் சிறுசோழன் வரவேற்புரை ஆற்றிட 2030-அனைவருக்கும் தண்ணீர் என்கிற வரைவு கொள்கையை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முதன்மை இயக்குனர் முனைவர் சத்திய வேல்முருகன் வெளியிட்டார்.
இந்த கருத்தரங்கில் நபார்டு வங்கி மேலாண் தலைமை பொதுச் செயலாளர் முனைவர் ஜின்னா தமிழக ஆறுகள் பல மீட்பு இயக்கத்தின் வழக்கறிஞர் குருசாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல மேலாளர் மதன் பூமி அறக்கட்டளை நிர்வாகி டாக்டர் ஞான சூரிய பகவான் காவிரி டெல்டா துணைத் தலைவர் சுப்பிரமணியன் திருச்சி தண்ணீர் அமைப்பின் நிர்வாகி நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் இறுதியாக விவசாயி ராஜேந்திரன் நல்ல உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக ஆறுகள் பல மீட்பு இயக்கம், அக்னி, கிரியா, பசுமை சிகரம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்