தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வா? சாவா? போராட்ட பிரகடன மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி சீனிவாசா திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி துவக்க உரையாற்றினார். இதில் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தொமுச ஒன்றிய கவுன்சிலர் ஜோசப் நெல்சன், மாநில செயலாளர் கமலக்கண்ணன், பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் முத்துக்குமார் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த மாநாட்டின் கோரிக்கைகளாக :- சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியத்திற்கு சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 அகவிலை படியுடன் வழங்கிட கோரியும், அரசுத்துறை காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணி மூப்பு அடிப்படையில் ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்கிடக் கோரியும், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்ற பெற்றது.
அதனைத் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் மாயமலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி கோரிக்கைகளை நிறைவேற்றி தராவிட்டால் வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி மாவட்ட தலைநகரில் பெண்கள் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணி நடத்துவது எனவும் அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிப்புக்கு முன் சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகை இடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார் .