தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கேக் வெட்டியும், கோயில்களில் சிறப்பு பூஜை செய்தும் ஏழை எளிய மக்களுக்கு குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாவட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதி உறையூர் பத்தாவது வார்டு நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்தநாளையொட்டி பிரம்மாண்ட கேக் வெட்டியும், அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட நல திட்டங்களை வழங்கினர்.