செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதிபராசக்தியின் அவதாரம் அன்னபூரணி அம்மன் என பெண் சாமியார் படத்துடன் அப்பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த பெண் சாமியார் ஒரு மண்டபத்தில் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவதும், பெண் பக்தர் ஒருவர் பெண் சாமியாரின் காலைப்பிடித்து அலறி துடிப்பதும் போன்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் பெண் சாமியாரின் வைரல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண் சாமியாரை எங்கேயோ பார்த்து போல இருப்பதாக கருதினர். அதற்கு விடையாக தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்சினைகளுக்கான டிவி ஷோவில் தன் கணவனை விட்டு வேறு ஒருவருடன் தன்னை சேர்த்து வைக்க சொல்லி இந்த பெண் வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் வீடியோவை கண்டெடுத்த நெட்டிசன்கள் அந்த பெண்தான் இந்த பெண் சாமியார் என சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்தப் பெண் சாமியார் குறித்து சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டு இருக்கிறார.
இந்நிலையில் வருகிற ஜனவரி 1ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தப் போவதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அதனடிப்படையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மண்டபத்தில் நடத்தக்கூடாது என்றும் அப்படி நடத்தினால் மண்டப உரிமையாளர் முதல் குற்றவாளியாக கைது செய்யப்படுவார் என போலீஸார் எச்சரித்துள்ளதாகவும், பெண் சாமியாரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.