தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  57 வது நாளான இன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பால் தெளித்து, படையல் வைத்து, இறுதி சடங்குகள் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக:- 2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்  காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது..காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவ படத்திற்கு மாலை அணிவித்து பால் தெளித்து, படையல் வைத்து , இறுதி சடங்குகள் செய்து நூதன முறையில் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.திமுக அரசு அவர்களின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான அறிவித்த அறிவிப்பை எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *