அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்கவும், கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான தங்கமணி அவர்கள் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்தவும் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய
திமுக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.