தமிழக வாழ்வுரிமை கட்சி டெல்டா மாவட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது . இதில் திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேல்முருகன்…. தேர்தலுக்கு எங்கள் கட்சியினரை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம், திமுக கூட்டணியில் சென்ற முறை ஒரு தொகுதியில் போட்டியிட்டோம் இந்த முறை கூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளோம் , ரூ.10000 தருகிறோம் என்பது தேர்தலில் மக்களின் அன்பை ஆதரவை பெறுவதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் செய்யும் யுக்தியை தான் அதிமுகவும் செய்துள்ளது , திமுக தேமுதிக கூட்டணி கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி என கூறியுள்ளது தவறான குற்றச்சாட்டு , இது ஏற்புடையதில்லை கண்டனத்திற்குரியது.  தமிழகத்தின் அரசியல் சூழல், நிர்வாக நடவடிக்கை தெரியாமல் பண்பாடற்ற , புரிதலற்ற செய்திகளை தான் விஜய் நேற்று வேலூரில் பேசியுள்ளார். அந்த அத்தனை பேச்சுமே அரசியல் தெரிந்த உங்களை போன்ற பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் எனக்கு தெரிந்த நண்பர்கள் கூட இவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி விவரம் இல்லாமல் உள்ளாரே என விமர்சித்தனர். தமிழகத்தில் விஜய் ஆட்சிக்கு வந்தால் 50 ஐ ஏ எஸ் , ஐ பி எஸ், பெண் எஸ்.பிக்கள் நியமிப்பேன் என்கின்றார், இது யூபிஎஸ் கேடர் என்கின்ற அடிப்படை அறிவு, புரிதல் கூட அவரிடம் இல்லை. கரூர் சம்பவத்தை தமிழக முதல்வர் மிகவும் நாகரிகமாக கையாண்டார் விஜய்க்கு சாதகமான பதிலை தான் முதல்வர் கூறினார், முதலமைச்சர் விஜயின் பெயரை எஃப் ஐ ஆர் இல் கூட சேர்க்கவில்லை, என் சிற்றறிவுக்கு எட்டிய வரை 41 பேர் இறப்பிற்கு காரணத்தை விஜய் மீது சுமத்தி திமுக அரசு நினைத்திருந்தால் கைது செய்திருக்கலாம், அவரது வாகனத்தை பறிமுதல் செய்திருக்கலாம், அவரை முடக்கிருக்க முடியும் அப்படி முதல்வர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். ஆனால் விஜய் முழுக்க முழுக்க உண்மைக்கு மாறான தவறான பொய்யான தகவல்களை தொடர்ந்து கூட்டங்களில் பேசி வருகிறார்.

உங்களுக்கு பாராட்ட மனம் இல்லை என்றால் கடந்து செல்லுங்கள், இது எதுவும் தெரியாமல் வாயில் வந்ததை எல்லாம் மேடையில் பேசி எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படிப்பது நாட்டிற்கு நல்லதா இவர்கள் நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என நம்பும் கூட்டத்தின் மீது தான் எனக்கு வருத்தம். விஜய்க்கு தமிழகத்தின் புவியியல் அரசியலும் தெரியவில்லை, சமூக அரசியலும் தெரியவில்லை அரசாங்க பதவிகளை குறித்த புரிதல் இல்லாதது தான் இதையெல்லாம் காட்டுகிறது. நயன்தாரா , அஜித் போன்றவர்கள் வந்தாலும் பணம் கொடுக்காமல் கூட்டம் கூடும். என்னை திட்டினால் தமிழக மக்களை திட்டுவது போல், விஜய் தான் தமிழ்நாடு, தமிழ்நாடு தான் விஜய் என்பதெல்லாம் ஓவராக தெரியவில்லையா. திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஜெயலலிதா, எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்கள் இப்படி பேசியுள்ளார்களா. உச்சத்தில் இருந்து வந்த சிவாஜி கணேசன் இப்படி பேசியுள்ளாரா, உலக நாயகன் கமலஹாசன் பேசியுள்ளாரா, ரஜினிகாந்த் நான் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருகிறேன் என என்றைக்காவது கூறியுள்ளாரா. ஏதோ தமிழ்நாடே இவர் பின்னால் தான் இயங்குவது போலவும், அவர் பேசுவது நகைப்புக்குரியது, அரசியலில் பக்குவமின்மையை காட்டுகிறது, அனுபவமின்மையை காட்டுகிறது.  விஜயின் பேச்சு அவர் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

விஜய் ஊழலை ஒழிக்க வந்தேன் என்கிறார் ஆனால் செங்கோட்டையன் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா, அதிமுகவிலிருந்து அவர் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா, விஜய் பாவம் அவரை விமர்சனம் பண்ண வேண்டாம்.  பண்ருட்டி ராமச்சந்திரன் ஓய்வு பெற்ற காலத்தில் ஏதோ செய்கிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள். அரசியலில் யார் யாரை விமர்சிக்கவில்லை தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் நான் உட்பட வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் என எல்லோரும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கட்சிகளை அரசியல் தளங்களில் விமர்சனம் செய்துள்ளோம். இன்று மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்ற சங்பரிவாரை எதிர்ப்பதற்கும், எடப்பாடி தலைமையான ஆட்சி என தமிழகத்தில் எந்த இடத்திலும் சொல்லாமல் என்டிஏ ஆட்சி என சொல்லும் அமித்ஷாவுக்கு சரியான பாடம் புகட்டும் அணியாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமையவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். எல்லோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியை விமர்சனம் செய்திருப்பர் அதை இப்போது பேசு பொருளாக விரும்பவில்லை. எங்களின் பிரதான எதிரி பாரதிய ஜனதா கட்சி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்