தமிழக முதலமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் நடந்த மறியல் போராட்டத்திற்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன் நாகராஜன் உதுமான் அலி குமாரவேல் பால்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு வரவேற்றார் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்திணை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் பேசினார்.மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி மாவட்ட நிதி காப்பாளர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் இந்த போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக் காரர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.