உச்ச நீதிமன்ற மேல் முறையீடு வழக்கை கைவிட வேண்டும். எம்.ஆர்.பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதி 356ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 (ஏ.என்.எஸ்) பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். ஐ.பி. ஹெச்.எஸ் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு மருத்துவத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பாணை வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ 18000 அனைத்து செவிலியர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 11 மாத ஒப்பந்த பணி முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் சித்ராதேவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் ஹெலன், மாநில இணைச்செயலாளர் கலையரசி, மாவட்ட இணை செயலாளர் ஜூலியா ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நவநீதன், மாவட்ட பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி நிறைவுறையாற்றினார். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் முத்துமணி நன்றி கூறினார்.
