தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் மாநகரம் சார்பில் திருச்சி கிராப்பட்டியில் உள்ள சங்க கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாசின் 136-வது பிறந்த நாள் விழா மற்றும் சமுதாய போராட்ட வீரர் சித்த மருத்துவர் ஆனந்தம் பண்டிதரின் 50-வது வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். துணை தலைவர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் சங்கர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மருத்துவர் சமூக மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தபால் தலை மத்திய அரசு வெளியிட வேண்டும், மருத்துவ சமுதாய மக்களுக்கு பி.சி.ஆர். சட்டம் பாதுகாப்பின் கீழ் இணைக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் துணைத் தலைவர் பிரபாகரன், துணை செயலாளர் ஜீவரத்தனம், இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், மனோகர், நிர்மல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.