அதிமுக திருச்சி மாநகர், மாவட்ட கழக, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், பாரளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி பாசறை ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாசறை செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் மாநில பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன்,

திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் முத்துமாரி , IT wing மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, நிர்வாகிகள் வனிதா, வெங்கட்பிரபு,நசீமா பாரிக் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *