தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த மாதம் 28.03.22-ஆம் தேதி முதல் 27.04.22-ஆம் தேதி வரை ஒரு மாதம் ‘ஆபரேசன் கஞ்சாவேட்டை 2.0”-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்படி, குமார் (எ) வெள்ளலிகுமார், என்பவர் கடந்த 21.02.22-ஆம் தேதி கிராப்பட்டி அன்புநகர் ரயில்வேபாலம் அருகில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் மேற்படி வழக்கின் எதிரி குமார் (எ) வெள்ளலிகுமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 27 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது. எனவே எதிரி குமார் (எ) வெள்ளலிகுமார் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்படி குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு (மருந்து சரக்கு குற்றவாளி) சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரி மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், ‘ஆபரேசன் கஞ்சாவேட்டை 2.0”-ன்படி திருச்சி மாநகரத்தில் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் எடமலைப்பட்டிப்புதூர், கே.கே.நகர், காந்திமார்க்கெட், பாலக்கரை, கோட்டை ஆகிய பகுதிகளில் 28.03.22-ஆம் தேதி முதல் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து 9 வழக்குகளில், 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு சுமார் ரூ.64,500/- மதிப்புள்ள 6.450 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.