திருச்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் நாளை 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரில் வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறு வதற்காகவும், பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட மற்றும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட கண்டோன்மென்ட் சரகத்தில் 7 ரவுடிகளும், கே.கே.நகர் சரகத்தில் 3 ரவுடிகளும், பொன்மலை சரகத்தில் 7 ரவுடிகளும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 6 ரவுடிகளும், காந்தி மார்க்கெட் சரகத்தில் 7 ரவுடிகளும், தில்லைநகர் சரகத்தில் 3 ரவுடிகள் என மொத்தம் இன்று ஒரே நாளில் 33 குற்ற பிண்ணனியில் உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் கண்டறிந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், திருச்சி மாநகரில் வாக்கு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க குற்ற பிண்ணனி உள்ள ரவுடிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.