தமிழகம் முழுவதும் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று பரவலாக மாநிலம் முழுவதும் பெய்தது. இதைத் தொடர்ந்து, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள்பட 19 மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை மாலை 4 மணி அளவில் கருமேகங்கள் சூழ சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது இந்த மழை திருச்சி ஏர்போர்ட் டிவிஎஸ் டோல்கேட் காஜாமலை கருமண்டபம் மத்திய பேருந்து நிலையம் பாலக்கரை கோர்ட் புத்தூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.