தேசிய கல்வி முகமை நடத்தும் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு திருச்சியில் மாவட்டத்தில் 13 மையங்களில் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை இன்று திருச்சி மாவட்டத்தில் சுமார் 7600 பேர் எழுதுகின்றனர். நடைபெறும் நீட் தேர்விற்கு பல்வேறு பகுதியில் இருந்து காலை முதலே மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் தேர்வு மையம் பகுதியில் குவிந்திருந்தனர்.
தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்கள் மின்னணு பொருட்கள், முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அனுமதிக்க வில்லை. முன்னதாக தேர்வு மையத்துக்குள் வரும் தேர்வாளர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிக்க அறிவுறுத்தப் பட்டிருந்தது.
தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.