திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் திருநங்கை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எங்களை எங்கள் குடும்பமும் சமுதாயமும் புறக்கணித்தால் தனியாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு என்று சொந்த வீடு ஏதும் இல்லாததால் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் நாங்கள் வாடகைக்கு வீடு கேட்டாலும் யாரும் வீடு வாடகை கொடுக்க முன்வருவதில்லை. அவ்வாறு வீடு கொடுத்தாலும் வீட்டின் வாடகை இரண்டு மடங்காக கொடுத்து குடியிருக்கும் சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம் மேலும் எங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் சிறு சிறு தொழில்களை செய்து வருகிறோம் தற்போது பல்வேறு மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது போல் எங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடக்கோரி 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.