நவீன மற்றும் புதிய ஆடை வடிவமைப்புகள் வரும் போதெல்லாம் அதனை அங்கீகரிக்க பேஷன் ஷோக்கள் நடத்தி அதனை பிரபலப்படுத்தும் பேஷன் ஷோக்கள் மேலைநாடுகளில் பிரபலமடைந்து, தென்னிந்தியாவினைக் கடந்து தற்போது தமிழகத்திலும் பிரபலமடைந்துவருகிறது. இதனிடையே திருச்சியில் தனியார் அமைப்பு மூலம் இளைஞர், இளம்பெண்கள் மற்றும் டீன், குழந்தைகளுக்கான மிஸ் திருச்சி, மிஸ்டர் திருச்சி, மிஸ்ஸஸ் திருச்சி, கிட்ஸ் திருச்சி என நவநாகரீக பேஷன் ஷோ கண்காட்சியினை ஏர்போர்ட் அருகில் உள்ள தனியார் உள்அரங்கில் நடத்தியது.
இந்த பேஷன் ஷோவானது, வண்ணங்களை மையப்படுத்தி ஆடை வடிவமைப்பாளர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில், புதிய ஆடை வடிவமைப்பாளர்களை அதேநேரம் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே பேஷன் குறித்த ஆர்வத்தை தூண்டி அவர்களை மாடலிங்களாக உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தின் முன்னனி ஆடை வடிவமைப்பாளர்கள் பலரின் எண்ணங்களின் உருவான நாகரீக ஆடைகளை அணிந்து இளம்பெண்கள் மற்றும் டீன் ஏஜ் மற்றும் குழந்தைகள் என பலரும் ஒய்யாரமாக அரங்கில் பார்வையாளர்கள் முன்னிலையில் ராம்ப்வாக் எனப்படும் ஒய்யாரநடை நடந்துவந்து தங்களது ஆடையழகை காட்டி அசத்தினர். இதில் மிஸ், மிஸஸ் திருச்சி, மிஸ்டர் திருச்சி என பல்வேறு பட்டங்களை வென்றவர்களுக்கு கிரீடம் அணிவித்து கேடயம் கொடுத்து அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பட்டங்கள் வென்றவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.