திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வயலூர் சீனிவாச நகர் பகுதியை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் வயது 22 என்பதும் தந்தையிடம் இன்டர்வியூக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை இது குறித்து அவரது தந்தை திருச்சி புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பெண் மீரா ஜாஸ்மின் என்பது தெரிய வந்தது.

மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைத்திருந்தனர். இந்நிலையில் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்திட வேண்டும் என உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம் ,மாதர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உங்களுக்கு உரிய தகவல் கொடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
