திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா காலணி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி வந்த அமைச்சர மதிவேந்தன் அந்த கட்டிடத்தை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில்:-

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாணவிகளுக்கு ராஜா காலணி பகுதியிலும், மாணவர்களுக்கு பஞ்சப்பூர் பகுதியிலும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. ராஜா காலணியில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான விடுதி கட்டுமான பணி இன்னும் ஒரிரு மாதங்களில முடிவடையும், தமிழ்நாட்டில இது போல பல இடங்களில் புதிய விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது ஏற்கனவே உள்ள விடுதிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது தற்போதைய நவீன வசதிகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் உள்ளடக்கியவாறு விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது மாணவ மாணவிகள் தங்கி படிப்பிப்பதற்கு ஏதுவாக தனித்தனி அறைகள் அறைகளுக்குள்ளே தனி தனி கழிப்பறை வசதி நூலகங்கள் படிக்கும் அறைகள் இணையதள வசதி என அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.

சுகாதார முறையில் உணவு சமைப்பதற்கான சமையல் கூடம் என ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் விடுதிகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏதேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படுகிறது. விடுதிகளில் குறைகள் இருப்பதாக குறிப்பிட்டு கூறினால் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்