திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சென்னையிலிருந்து சுமார் 20 டன் இரும்பு ராடு களை ஏற்றிக்கொண்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி சென்ற கனரக லாரியின் முன்பக்க டயர் வெடித்த விபத்தில் சாலையோர இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து சுமார் 20 டன் எடை கொண்ட இரும்பு ராடுகளை 16 டயர் கொண்ட கனரக லாரியினை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முத்துகிருஷ்ணன் என்ற 32 வயது ஓட்டுநர் லாரியை சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக தூத்துக்குடிக்கு ஓட்டி வந்தார். அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யான சிறுகனூர் காவல் நிலையம் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற முத்துகிருஷ்ணன் அவரது கட்டுப்பாட்டை மீறிய கனரக லாரி முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது .
இதனால் லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி அந்த இடிபாடுகளில் சிக்கி லாரி டிரைவர் முத்துகிருஷ்ணன் பலியானார் . இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநர் முத்து கிருஷ்ணனின் உடலை சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மீட்புக்குழுவினர் சமயபுரம் போக்குவரத்து காவலர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி சடலமான ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் பிரேதத்தை மீட்டனர் .
இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுகனூர் போலீசார் லாரியின் ஓட்டுநர் இருக்கையில் யார் ஓட்டுநர் என்பது குறித்து பார்த்தபொழுது 2 ஆதார் கார்டு இரண்டு டிரைவிங் லைசென்ஸ் இருந்துள்ளது அதனால் இறந்தவர் யார் என்பது என்று தெரியாமல் கண்டெய்னர் லாரியின் கம்பெனிக்கு போன் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.