திருச்சி மாவட்டம் கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர் கிராமம் குடித் தெருவைச் சேர்ந்தவர்கள் 50 வயதான தங்கராஜ், 47 வயதான செந்தில்,மற்றும் 48 வயதான சின்னத்தம்பி. இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கறவை பசுமாட்டை வைத்து பராமரித்து வருகின்றனர். நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சில பசுமாடுகள் வயல் பகுதிகளுக்குள் மேயச் சென்றது.வழக்கம்போல் வீட்டிற்கு திரும்பி வரும் பசு மாடுகள் வரவில்லை. மாட்டின் உரிமையாளர்கள் பசுமாடுகளை இரவு வரை தேடிவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வந்து விடும் என இருந்துள்ளனர்.

இந்நிலையில் காலையில் அப்பகுதியில் வயல் பகுதியில் வேலைக்குச் சென்றவர்கள் வயல் காட்டில் 3 பசுமாடுகள் ஆங்காங்கே இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிராமத்தில் உள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மாட்டின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 3 பசுமாடுகள் வாயில் நுரை தள்ளியவாறு இறந்தது கிடந்தது கண்டு வேதனையடைந்தனர். இந்த மாடுகளுக்கு அடையாளம் தெரியாத கொடூர மனிதர்கள் உணவுகளில் விஷம் கலந்து வைத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் மாடுகள் உயிரிழந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவர் தலைமையில் உடற்கூறு ஆய்வு செய்ய ஏற்பாடுகளை செய்தனர். உடற்கூறு ஆய்வின் முடிவில் மாடுகள் எப்படி இருந்தது என தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். உயிரிழந்த கருவுற்ற பசு மாடுகள் ஒவ்வொன்றும் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பசுமாடுகள் கன்று குட்டிகளை ஈன்றும் தருவாயில் இருந்துள்ளது. இதேபோல் வயலுக்கு மேயச்சென்ற மேலும் இரண்டு மாடுகளை காணவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காணாமல் போன இரண்டு பசுமாடுகளையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *