தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், தமிழக காவல்துறை இயக்குநரின் மேலான அறிவுறுத்தலின் பேரிலும் திருச்சி மாநகர ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் முழுவதும் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக திருச்சி மாநகர காவல் கள்ளசாராயம் விற்பனை மற்றும் கள்ளசந்தையில் மதுபானம் விற்பனையை தடுக்கவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, திருச்சி மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் போலி மதுபானம் தயாரித்தல், கள்ளசந்தையில் மதுபானம் விற்பனை செய்தல் போன்றவகைகளை பொதுமக்களின் உதவியுடன் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட மக்கள் தங்களது புகார் அல்லது தகவல் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை எண்:100- மற்றும் பிரத்யேகமாக “96262-73399″ என்ற அலைபேசி எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தகவல் அல்லது புகார் தெரிவித்தால் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை மேற்க் கொள்ளப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் . காக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார்.