திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து செய்யவும் , அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்கவும் , காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார் . அதன்படி கடந்த 01.11.21 – ந்தேதி முதல் திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட உறையூர் காவல்நிலையத்தில் 6 வழக்கில் 7 குற்றவாளிகளும் , கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல்நிலையங்களில் தலா 4 வழக்கில் 10 குற்றவாளிகளும் , காந்திமார்க்கெட் , பாலக்கரை , தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களில் தலா 3 வழக்கில் 16 குற்றவாளிகளும் , கண்டோன்மெண்ட் மற்றும் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையங்களில் தலா 2 வழக்குகளில் 4 குற்றவாளிகளும் , அரியமங்கலம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கில் 1 குற்றவாளி என மொத்தம் 28 வழக்குகளில் 38 குற்றவாளிகள் கடந்த 20 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேற்படி குற்றவாளிகளிடம் இருந்து பணம் , கள்ள லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 7 செல்போன் , மூன்று இருசக்கர வாகனம் , ஒரு மூன்று வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.