திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அகிலாண்டாபுரம் பகுதியில் காரில் சென்ற சாதி சங்க நிர்வாகியை நாட்டு வெடி குண்டு வீசிய புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை சமயபுரம் போலீஸôர் செய்தனர். மேலும் சிலரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
திருச்சி புத்தூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் திலீபன் (34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இச் சங்கத்தின் கொடியேற்று விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கான பணிகள் தொடர்பாக திங்கள்கிழமை இரவு அவரது வீட்டிலிருந்து அவரது பார்ச்சூனர் காரில் லால்குடி நோக்கி வந்தார். அப்போது அகிலாண்டபுரம் பகுதியில் காரில் சென்ற திலீபன் மீது அப் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் 5 நாட்டு வெடி குண்டுகளை வீசியுள்ளனர்.
அதிஷ்டவசமாக 3 குண்டுகள் வெடிக்காத நிலையில் 2 குண்டுகள் மட்டும் கார் மீது பட்டு வெடித்து சிதறியது. இதில் திலீபன் மற்றும் அவருடன் வந்த சந்திரன் (61) என்பவருக்கும் எவ்வித காயமின்றி உயிர்தப்பினார்கள். சம்பவ இடத்திலிருந்து தப்பித்த இருவரும் அவர்கள் வந்த காரிலேயே சமயபுரம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவங்களை பார்வையிட்டு விசாரணை துரிதப்படுத்தினார்.
புகாரின் பேரில் அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஸ்ணன் (28) மகாலிங்கம் மகன் செந்தில்குமார் (42), மாமுண்டி மகன் சுரேஷ் (21), சீரங்கம் வடிகால் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் ( 25) இதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் வினோத் (25) ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு கைது செய்து நீதி மன்ற உத்தரவின் கீழ் 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் திலீபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே. செல்வகுமார் தூண்டுதலின் பேரில் எனக்கும் என் மனைவிக்கும் தொடர்ந்து நேரிலும், செல்போனிலும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக உளவுத்துறை மற்றும் தனிப்பிரிவு, குற்றப்பிரிவு உள்ளிட்ட போலீஸôரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அப்போதே நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இப்போது இச் சம்பவம் நடந்திருக்காது. மேலும் என்னை கொலை செய்ய வீசிய நாட்டு வெடி குண்டுகள் மதுரையிலிருந்து வாங்கி வந்துள்ளனர். எனவே இந்த குற்றச்சம்பவங்களில் மதுரையினைச் சேர்ந்தவர்களும் தொடர்பிருக்கலாம் என்றார் அவர்.