திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு செந்தமான விவசாய நிலம் கானாப்பாடி காப்புகாடு அருகே உள்ளது. வழக்கம்போல் இன்று காலை தனது வயலுக்கு சென்ற அவர் தனக்கு செந்தமான 3 கோழிகளில் ஒன்றை காணவில்லை உடனே அங்கு தேடிய போது அங்குள்ள அவரது கொட்டகையில் மலைப்பாம்பு ஒன்று கோழியை முழுங்கிவிட்டு நகரமுடியாமல் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
உடனே தகவலை இந்திய விலங்குகள் நல வாரிய மாநில அலுவலர் இளங்கோவனுக்கு தெரிவித்தார். தவலரிந்து வந்த வன காவலர் ராஜாஜி மற்றும் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்து கொட்டகையிலிருந்து வெளியே கொண்டு வந்தனர் அப்போது பாம்பானது இரையை செரிக்கமுடியாமல் முழு கோழியையும் கக்கியது. அதனைத் தொடர்ந்து கோழியை புதைத்து விட்டு மலைப்பாம்பை கானாப்பாடி காப்பு காடு வன எல்லைக்குள் பாதுகாப்பாக விட்டனர். மலைப்பாம்பு ஒன்று பொதுமக்கள் விவசாயம் செய்யும் பகுதியில் வந்து கோழியை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.