திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டியன், ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் 6வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் இருந்து சந்தேகத்துக்கு இடமாக வந்த நபரின் உடைமைகளை சோதனை மேற்கொண்ட போது அவரது பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூபாய் 75 லட்சம் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியதாஸ் (49) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பின்னர் வருமான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதாவிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமான வரி துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிப்பட்ட பணம் 75 லட்சம் ஹவாலா பணம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *