தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் தங்களுடைய தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் முதல் விற்பனையை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் என்று தொடங்கி வைத்தார்…
திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளிக்கு 143.75 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 300 லட்சங்கள் விற்பனை விளக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில் …
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த தீபாவளி பண்டிகையை அரசு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் அதேபோல் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் உள்ளதாக தெரிவித்தார்..