திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் சமயபுரம் வரக்கூடிய வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. அதில் சமயபுரம் பகுதிக்கு வரக்கூடிய 7 வழிகளிலும் டெண்டர் எடுத்தவர்கள் தங்களது ஆட்களை நியமித்து வரிவசூல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரக்குமார் முன்னிலையில் வாகன வரி வசூல் ஒப்பந்த புள்ளி டெண்டர் விடுவதற்காக ஒப்பந்தகாரர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் டெண்டர் எடுக்க வந்த ஒப்பந்தக்காரர்களான ரெங்கராஜன், செந்தில் குமார், சத்திய நாராயணன் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது ஆனால் டெண்டர் எடுக்கும் இடத்தில் ஒப்பந்தக்காரர்கள் அல்லாத திமுக நிர்வாகிகள் இருந்தது சந்தேகத்தை கிளப்பியது மேலும் வாகன வரி வசூல் ஒப்பந்தப்புள்ளி டெண்டர் பெட்டியினை சீல் வைத்து மூடாமல் வெறும் பூட்டு போட்டு பூட்டியுள்ளதால் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய ஒப்பந்ததாரர்கள் கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரக் குமாரிடம் முறையிட்டனர் அப்போது அங்கிருந்த ஒப்பந்தக்காரர்கள் அல்லாத திமுகவினர் ஒப்பந்தம் எடுக்க வந்த ஒப்பந்தக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டெண்டர் நடைபெறும் இடத்திலிருந்து வாக்குவாதம் நடைபெறும் சத்தத்தை கேட்டு உள்ளே வந்த செய்தியாளர்கள் இந்த சம்பவங்களை செய்திக்காக வீடியோ பதிவு எடுத்தனர். அப்போது திமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை வீடியோ எடுக்க கூடாதென தடுத்தும், தரைக்குறைவாக ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த சமயபுரம் திமுக நகர செயலாளர் துரை ராஜசேகர் அமமுக நிர்வாகி இஞ்சூர் ராமு மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம் உள்ளிட்டோரால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரக்குமாரிடம் புகாராக தெரிவித்தனர். அப்போது அவர் திமுக நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் அனுமதி இன்று உள்ளே வந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து டெண்டர் எடுக்க வந்த ஒப்பந்தகாரர் கூறுகையில்:- டெண்டரில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய பேரூராட்சி அலுவலகத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா வை ஆய்வு செய்தால் பாரபட்சமாக செயல்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரின் நடவடிக்கைகள் தெரிய வரும் என பாதிக்கப்பட்ட ஒப்பந்த தார்ர்கள் குற்றச்சாட்டினர்.