திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடு போன இறுச்சக்கர வாகனங்களை கைப்பற்றிய காவல்துறையினர் – உரிய ஆவணங்களை காட்டி வாகன உரிமையாளர்கள் பெற்று செல்ல ஏற்பாடு …திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம்,தெப்பக்குளம் சிங்காரத்தோப்பு, அண்ணாசிலை சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடு போன 39 இருசக்கர வாகனங்கள் கோட்டை காவல் நிலைய போலீசாரால் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை ஆர்.சி புக் உள்ளிட்ட உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் முக்கிய நகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இருசக்கர வாகன திருடர்களை உடனடியாக மடக்கி பிடிக்க காவல் துறையினருக்கு உறுதுனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.