திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான டாக்டர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்த

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், பங்கேற்று சிறப்பித்த தலைமை கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,

பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை மேருமான சீனிவாசன் தெரிவித்துள்ளார்:-.
