திருச்சி விமானநிலைய விரிவாக்க பணிக்காக பட்டதம்மாள் தெரு. தேவைப்படும் என்ற பட்சத்தில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி அவர்களை சந்தித்து, மக்கள் முறையிட்டனர், பல கட்டப் போராட்டங்களுக்குப் பின் சுமுகமான பேச்சுவார்த்தையில் அருகில் உள்ள வளனார் பால்பண்ணை அரசு புறம்போக்கு இடமாக இருந்தது . அந்த இடத்தினை எங்களுக்கு தருவதாக ஒப்புக்கொண்டு தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் மூலமாக மூலமாக அன்றைய அனைத்து துணை தலைவர் முருகன் முன்னிலையில் ஒப்பக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாமல் எங்களுக்கு தருவதாக கூறிய இடத்தினை இலங்கை அகதிகள் மாறுவாழ்வு முகாம் கட்டுவதற்காக துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிகழ்வில் தொடர்புடைய முறையாக RDO, DRO, தாசில்தார், ஆகியோரிடம் முறையாக தெரிவிக்கப்பட்டு மற்றுமொரு சுமூக பேச்சுவார்த்தையில் மக்கள் கோரிக்கையின் பேரில் 1974-ல் வழங்கப்பட்ட பட்டாவிற்கு தற்போது அரசு புறம்போக்கு , நத்தம் புறம்போக்கு என்ற நிலத்தின் வகைப்பாட்டில் வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் பகுதியை குடியிருப்பு பகுதியாக மாற்றி தருமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர்களும் இசைந்து முதலில் இந்திய விமானநிலைய ஆணையத்திற்கு உங்கள் பகுதியை கைவிடுமாறும், கடிதம் வழங்குகிறோம், பின்னார் உங்களுக்கு முறையாக இரயத்துவாரி என்று பட்ட வழங்கிறோம் என்று கூறி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அரசு முத்திரையுடன் கூடிய தாசில்தார் கடிதம் வழங்கினர். எங்கள் பகுதிக்கு அதன் பின்னர் பலமாதங்கள் கடந்து விட்ட நிலையில் எந்தவிதமான முன்னேற்பாடுகள் இல்லாத நிலையில் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயத்துவாரி என்ற நிலத்தின் வகைப்பாட்டில் பட்டா வழங்குமாறு பணிவுபுடன் கேட்டுக்கொள்கிறேம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது . மனு அளிக்கப்பட்டபோது அருகில் பொன்மலை மண்டல உதவி ஆணையர் சண்முகம் , செயற்பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர் .