திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 40 வது தேசிய கண் தான இரு வார விழா கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தானத்தில் சிறந்த கண் தானம் இந்த தானத்தின் மூலம் இருவர் வாழ்வில் ஒளி ஏற்றலாம் தேசிய கண்பான இரு வார விழாவை முன்னிட்டு மக்களுக்கு கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்கள் இறப்புக்குப் பின்பு கண் தானம் செய்ய ஒக்கப்படுத்துவதற்கு ஏற்றவாறு
திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட உதவி ஆட்சி தலைவர் தீபிஜானு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கந்தான விழிப்புணர்வு பேரணியில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டானம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் பதவிகளை ஏந்தி பேரணையாக சென்றனர்.