திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு
ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று நடைபெற்றது இந்த முகாமில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், , மண்டல தலைவர் மதிவாணன், மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) அருணகிரி, துணை இயக்குனர் மகாராணி, அரசு அலுவலர்கள், தனியார்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.