தமிழ்நாடு ஏஐடியுசி ஆஷா பணியாளர்கள் சங்கத்தின் மண்டல மாநாடு திருச்சி புத்தூர் ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த மண்டல மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட தலைவர் சத்யா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய செயலாளர் வகிதா மற்றும் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த மண்டல மாநாட்டின் கோரிக்கைகளாக:- தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதாரத்துறையில் செவிலியர்களுக்கு இணையாக பணிபுரிந்து வரும் ஆஷா பணியாளர்களை பணி நியமனம் ஆனை வழங்க கோரியும், ஊக்கத்தொகை மட்டுமே பெற்று வரும் ஆஷா பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் ரூபாய் 24 ஆயிரம் வழங்க கோரியும். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி +2 படித்த ஆஷா பணியாளர்களை கிராம சுகாதார செவிலியராக பணி ஆணை வழங்க கோரியும்.
அனைத்து ஆஷா பணியாளர்களுக்கும் அடையாள அட்டை மற்றும் பயிற்சி முடித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்க கோரியும். ஆஷா பணியாளர்கள் அனைவருக்கும் தரமான யூனிபாம் (சீருடைகள்) வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் திருச்சி புதுக்கோட்டை கள்ளக்குறிச்சி ராமநாதபுரம் சிவகங்கை பெரம்பலூர் நாமக்கல் அறந்தாங்கி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.