திருச்சி கன்வெர்ஜ் யோகா ஸ்டுடியோ மற்றும் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் நல அமைப்பு ஆகியவை இணைந்து திருச்சி சிந்தாமணி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த யோகாசனப் போட்டியானது திருச்சி மாவட்ட அளவில் இது முதல் முறையாக நடத்தப்படுகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கு பெறும் இந்த யோகா போட்டிகளில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகளும் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த யோகா போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் செய்திருந்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்:-

யோகா செய்வதனால் மொபைல் போனுக்கு அடிமையாக உள்ள சிறுவர்கள் அதிலிருந்து விடுபட அவர்களுக்கு இந்த யோகா பயிற்சிகள் உபயோகமாக இருக்கும். அதேபோல் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவு போன்ற பல உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் அதை யோகா செய்வதால் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதேபோல் பெரியவர்கள் சர்க்கரை நோய், பி.பி போன்றவற்றிலிருந்து விடுபடவும் இந்த யோகா பயிற்சிகள் உபயோகம் உள்ளதாக இருக்கும். குழந்தைகளஅ தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துவதற்கு இந்த யோகா பயிற்சிகள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கள் உடலில் ஆரம்பித்து மனம் வரை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா உதவும். எட்டு வயதில் இருந்து எவ்வளவு வயது வரை உங்களுக்கு யோகா செய்ய முடியுமோ அதுவரை செய்யலாம். இது வயது சார்ந்த பயிற்சி கிடையாது, நம்முடைய முயற்சி தான் இந்த பயிற்சி என்றார்.
