திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த திருச்சி கோட்டை மேலாளர் மணீஸ் அகர்வால்.
அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி வளாகத்தில் தேசியக் கொடியை மேயர் அன்பழகன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி வாலிபர் ஒருவர் தனது கட்டை விரல் நகத்தில் மூவர்ண தேசிய கொடியை ஓவியமாக வரைந்துள்ளார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரி மற்றும் திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் கல்லூரி முதல்வர் முப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ஹஜ்ரத் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் மேலும் மதரஸா மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 23ல் தூய்மை பணியாளர் வார்டு அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார். அருகில் சுகாதார அலுவலர் இளங்கோவன், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா ஏற்றினார். அருகில் மாவட்ட தலைவர் சபியுல்லா, மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்.
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பழங்கால நாணயம், பணத்தாள், அஞ்சல் தலை மற்றும் பழம் பொருட்கள் சேகரிப்பு நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் நாணயங்களை கொண்டு மூவர்ண தேசியக் கொடியை வடிவமைத்துள்ளார்.