திருச்சி கொட்டப்பட்டு அருகில் இருக்கும் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மாநகராட்சியின் மண்டலம் 3. நுண் உர செயலாக்க மையம் உள்ளது.இந்த மையத்தில் பொன்மலை பகுதியை சேர்ந்த குப்பைகள் கொண்டுவரப்பட்ட தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து எடுப்பதற்கு என்று தனியாக பிளாஸ்டிக் குடோன் உள்ளது.இந்த நிலையில் இன்று நுண் உர மையத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது..இந்த தீ மள மள என பரவியது.இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள் .
இது குறித்து உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு தகவல் அறிந்து 46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், மாநகராட்சி உதவி பொறியாளரும் மற்றும் ஊழியர்களும் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் அரை மணி தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.உரிய நேரத்தில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.