விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும், தமிழகம் முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யகோரியும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்ககோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று கரூர் பைபாஸ் சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, டெல்லியில் சென்று லாபகரமான விலை கேட்டு போராடச் சென்ற தன்னுடைய காலை மத்திய பிரதேச போலீசாரை கொண்டு உடைத்துள்ளதாகவும், காவல்துறையைக் கொண்டு விவசாயிகளை மிரட்டும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கும் நியாயம் கேட்டுத்தான் போராடுகிறோம். அமைச்சர்கள் யாராவது வந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம். இல்லாவிட்டால் சாகும்வரை போராட்டத்தை தொடர்வோம். விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து சென்னையில் சென்று போராடுவோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தகவல் அறிந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைச்சர் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்