காசியில் பயிற்சிபெற்ற அகோரி குருவான மணிகண்டன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் எட்டு வருடங்களாக அகோரி பயிற்சி பெற்ற கல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் அகோரிக்கும் அகோரி குருவான மணிகண்டனுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது மணமகன்அகோரி மணிகண்டனும் மணப்பெண் அகோரி பிரியங்காவும் தன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி கோலத்தில் இருவரும் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர்.
முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்றது யாகத்தின் போது சக அகோரிகள் தம்புரா மேளம் அடித்து சங்கொலி எழுப்பி ஹர ஹர மகாதேவா என்று முழங்கினார்.
அந்த திருமணத்தை அகோரி மணிகண்டன் குருவான சித்தர் வழி மதுரைபால்சாமி என்பவர் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் யாகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.