திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22) மற்றும் துறையூர் புலிவலம் பகுதியை சேர்ந்த குமரவேல் (42) இவர்கள் மீது பல வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் பட்டா கத்தியுடன் சில நபர்கள் வலம் வருவதும் மேலும் அவர்கள் மண்ணச்சநல்லூர் துறையூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்பி யின் உத்தரவின்படி மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராம் தலைமையிலான தனிப்படை போலீசார் ரவுடி அரவிந்த் மற்றும் குமரவேல் இருவரையும் தேடி வந்தனர்.

இதையடுத்து மண்ணச்சநல்லூர் துறையூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் அருகாமையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் நேற்று இரவு பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்தனர். அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அரவிந்த் பட்டாகத்தியை காட்டி காவலர்களை மிரட்டி காவலர் தமிழழகன் என்பவரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு பின்னர் அரவிந்தும் தப்பிக்க கீழே குதித்து இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்றபோது போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி மற்றும் சூரிக்கத்தி ஆகியவற்றை கைப்பற்றப்பட்டு மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவர் மீதும் 7 குற்ற எண் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்