திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபு ரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்ததில் ஒரு வீட்டில் 56 மூட்டைகளில் 240 கிலோ ஹான்ஸ், 10 கிலோ கூல் லீப், 97 கிலோ விமல், இரண்டு கிலோ மானிக்சந்த் என 350 கிலோ எடையுள்ள 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அந்த குட்கா பொருட்களை திருச்சி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் அதனை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேவராம்(30), கஜானா ராம்(34) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து திருச்சியில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *