திருச்சி தலைமை நீதிமன்ற வளாகத்தில் 1905ல் கட்டப்பட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற கட்டிடம் தற்போது 1.34 கோடியில், பொதுப்பணித்துறை கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம் சார்பில் பழமை மாறாமல் கடுக்காய், வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி உள்ளிட்டவைகளால் புணரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் திறப்பு விழா நடைபெற்றது.
நீதிபதி சேம்பர், நீதிமன்ற வழக்காடு மையம் உள்ளிட்டவைகள் அடங்கிய குற்றவியல் நடுவர் நீதிமன்ற கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ராஜா திறந்து வைத்து, ஆவண காப்பக அறை மற்றும் நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டார். உயர்நீதிமன்ற தலைமை நீதி அரசரிடம் திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு சேம்பர், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் அடங்கியும் மனுவையும் அளித்தனர்.
இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு, மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உள்ளிட்ட சார்பு நீதிமன்ற நீதிபதிகள், காவல் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.