திருச்சி லால்குடி மேல வீதி மொத்த தெரு அருகே உள்ள ஜின்னா மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா புகையிலை குட்கா மற்றும் போதை தரும் புகையிலை பொருட்கள் அனைத்தையும் அந்த பகுதியில் உள்ளசிறு கடைகள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருத்துவ துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை கொண்ட குழுவினர் மற்றும் உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் ஜின்னா மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்டனர் கடைக்குள் இருந்த குடோனில் மூட்டை மூட்டையாக போதை தரும் பொருட்கள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர் பிறகு போதைப் பொருட்கள் விற்பனை செய்ததை கண்டித்து ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது
சில மாதங்களுக்கு முன்பு இதே கடையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததை கண்டித்து உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் ரூபாய் 5000 அபராதம் எச்சரிக்கை விடுத்து கண்டித்து சென்றனர் மீண்டும் அதே கடையில் மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல்செய்யபட்டது அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது தொடர்ந்து குற்ற நடவடிக்கையில் ஜின்னா ஈடுபட்டதால் அந்த கடைகள் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலையில் கடைகளை மூடி சீல் வைக்கப்பட்டது