திருச்சி கள்பாலையம் பகுதியில் வசித்து வருபவர் பெண் வி.ஏ.ஓ கலைவாணி இவர் தற்போது ஸ்ரீரங்கத்தில் வி.ஏ.ஓவாக பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் MAJ traders என்னும் கடையில் புளி வாங்கி சென்றதாக தெரிகிறது. மேலும் அது சரியில்லை எனக்கூறி வியாபாரிடம் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் விஏஓ வாங்கிய பொருட்களை வியாபாரின் கடை மீது வீசி எறிந்தார் இதில் ஆத்திரம் அடைந்த கடையில் வேலை பார்த்த பெண்கள் விஏஒவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளி தாக்கியதாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சென்ற பெண் விஏஓ கலைவாணி கள்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட உறவினர்களை வரவைத்து கடை வியாபாரி மற்றும் பெண் ஊழியரை தாக்கி கடையை சேதப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இது சம்பந்தமாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் சாதிக்பாஷா புகார் அளித்துள்ளார்.. வி.ஏ.ஓ கலைவாணி மற்றும் வியாபார ஸ்தலத்தை சூறையாடிய உறவினர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வியாபாரிகளை அச்சுறுத்தும் இது போன்ற அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் விஏஓ பதவியை தவறாக பயன்படுத்தும் இது போன்ற அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில்:- இது போன்ற வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தி கடையை சேதப்படுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வியாபாரிகளை ஒன்று திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்