புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து தொழிலாளர் கடன்களை உடனே அடைக்க வேண்டும். .21 மாதமாக ஓய்வு பெற்ற தொழிலாளி வெறும் கையோடு அனுப்புவதை கைவிட வேண்டும்.30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க திருச்சி, கரூர் மண்டலம், அரசு விரைவு போக்குவரத்து சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர்கள் சார்பில் திருச்சி திருச்சி மத்திய பஸ் நிலைய பெரியார் சிலை ரவுண்டானா அருகில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க திருச்சி, கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை தாங்கினார். சிஐடியூ மாநகர் மாவட்ட பொருளாளர் மணிகண்டன், சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன்,விரைவு போக்குவரத்து கழக சங்க மாநில தலைவர் அருள் தாஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க மண்டல பொதுச் செயலாளர் மாணிக்கம், மண்டல துணைத் தலைவர் கருணாநிதி, பொருளாளர் முத்துக்குமார், சி ஐ டி யு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மண்டல பொருளாளர் ராமதாஸ், மத்திய சங்க நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் இதனால் மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *