திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யா கண்ணு மற்றும் விவசாயிகள் கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை தடுத்து நிறுத்தி இதுவரை கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறக்காமல் உள்ளது. எனவே விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும் மலத்தைத் தான் திங்க முடியும் எனக் கூறி மலத்தை மாவட்ட ஆட்சியிடம் முன் திங்க முயற்சித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து கூட்டத்தில் வந்து பேசுமாறு கூறிவிட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு இந்த பட்ஜெட்டில் 48 லட்சம் கோடியில் விவசாயிகளுக்கு வெறும் ஒரு லட்சத்து 52ஆயிரம் கோடிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளனர். ஒரு நாடு பலம் பொருந்திய நாடாக வேண்டுமென்றால் விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மேலும் நதிகள் இணைக்க போதிய நிதி ஒதுக்காமல் விவசாய பிரச்சனைக்காக போராடினால் காவல்துறையினர் கைது செய்வதும் வீட்டு காவிலில் வைப்பதும் ஜனநாயக நாடா? அல்லது சர்வாதிகார நாடா? விவசாயிகள் போராடக் கூடாதா எனவே, மாவட்ட ஆட்சி அவர்கள் நாளை டெல்லி செல்லும் எங்களை காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க கூடாது என கோரிக்கையை முன் வைத்தார்.