திருச்சி லால்குடி, காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் இன்று மியாவாக்கி முறையில் அடர்வனக்காடுகள் உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு.கே என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி, காணக் கிளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கராயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.