திருச்சி ஓயாமரி தகனமேடையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகனமேடையில் போதிய வெளிச்சம் இல்லாமல் உடல்களை செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் எரியூட்டப் படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆதாரத்துடன் திருச்சிராப்பள்ளி மேயர் மற்றும் ஆணையர் கவனத்திற்கு சில நாட்கள் முன்பாக கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து செய்தி “தமிழ் முழக்கம்” ஆன்லைன் பக்கத்தில் வெளியானது.
அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உடனடியாக அந்த இடத்தில் மின் விளக்குகளை அமைத்திருந்தது இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மக்கள் பணி தொடர வேண்டும். இந்த செயலுக்கு உறுதுணையாகயிருந்த வணக்கத்திற்குறிய மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர், மண்டலம் எண் – 1 உதவி ஆணையர், மாநகராட்சி ஜேயி மற்றும் இந்தப் பிரச்சினையை மாநகராட்சி நிர்வாகத்திடம் கொண்டு சென்ற திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.