இன்று 26.8.25 காலை 9 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் பொன் மலை ரயில் நிலையத்திற்கும் இடையே ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் நபர் ஏதோ ஒரு ரயில் வண்டியில் பயணம் செய்து வந்த போது தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.
இறந்த நபர் மஞ்சள் கலரில் பூ போட்ட சேலையும், சிவப்பு கலர் ஜாக்கெட்டும், ஊதா நிறத்தில் பாவாடை அணிந்துள்ளார். மேற்படி நபரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டாலின் 9080563321 மற்றும் 9443472524. மேலும் இத்தகவலை அனைத்து வாட்சப் குரூப்பிலும் பகிர்ந்து உதவுமாறு காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.