எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ரிவோல்ட் நாடு முழுவதும் அதன் ஷோரூம் எண்ணிக்கைகளை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் திறக்கப்பட்டு தற்போது ஐந்தாவது ஷோரூம் திருச்சியில் தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் துவங்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவிற்கு ( MM Eco மோட்டார்ஸ்-ன்) தலைவர் மதன், ஜீவாஸ் குரூப் நிறுவன தலைவர் ஜீவநாதன்,வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் வேல்முருகன், திருச்சி போக்குவரத்து துணை ஆணையர் ஜோசப் நிக்சன் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி ரிவோல்ட் ஷோரூமை திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த (MM Eco மோட்டார்ஸ் ன் தலைவர்) மதன் கூறுகையில்..
“இது தமிழகத்தில் MM eco motors சார்பாக திறக்கப்படும் ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தின் 5 ஆவது ஷோ ரூம் ஆகும் .
நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை காரணமாக, மாற்று வாகனத்தை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பலர் தற்போது மின்சார வாகனங்கள் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.
பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாகனங்கள் மிகவும் சிக்கனமானவை” மேலும் புதுப்பொலிவுடன் திருச்சியில் துவங்கப்பட்டது ரிவோல்ட் எலக்ட்ரிக் வாகனம் ஷோரூம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.